Monday, January 31, 2011

ஏழு கப் பர்ஃபி

ஏழு கப் பர்ஃபி

தேவையான பொருட்கள்


கடலை மாவு - 1 கப்
சன்னமாக துருவிய தேங்காய் - 1 1/2 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 1 கப்
( மொத்தம் 7 கப் )

செய்முறை

எல்லா பொருட்களையும் ஒரு நான் ஸ்டிக் கடாயில் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும்

நெய் தடவிய தாம்பாளத்தில் ஊற்றி சிறிது ஆறவிட்டு விருப்பமான வடிவத்தில்

வில்லைகள் போடவும்.

Thursday, January 27, 2011

மிளகு ஜீரக ரசம்

சுலபமான மிளகு சீரக ரசம்


தேவையான பொருட்கள்

புளி - ஒரு சிறிய எலுமிச்சங்காய் அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கடுகு தாளிக்க
உப்பு தேவைக்கேற்ப
நெய்

செய்முறை

புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து கரைசலை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

மிள்கு, சீரகம், மிள்காய் வற்றல், துவரம் பருப்பு எல்லாவற்றையும் 5 - 6 நிமிடங்கள் ஊறவைக்கவும். ( அதிக நேரம் ஊறவிடவேண்டாம்). பின் அந்தக் கலவையை 4-5 கருவேப்பிலையுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

புளிக்கரைசலுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மிளகு சீரகக் கலவையை 3/4 கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் புளிக்கரைசலில் விடவும்.

அது கொதிக்க ஆரம்பித்ததும் மேலே மிதக்கும் நுரையை எடுத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி கருவேப்பிலை சேர்க்கவும்.

நெய்யில் கடுகைத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.

குறிப்பு : இந்த ரசத்துக்கு ரசப்பொடி, பெருங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. சாதத்துடன் கலந்து பருப்பு துவையல் அல்லது சுட்ட அப்பளம் இவற்றுடன் சாப்பிடலாம்.

PEPPER JEERAGA RASAM

SIMPLE PEPPER JEERAGA RASAM

INGREDIENTS

Tamarind - 1 small lemon size
Jeeragam  (cumin seeds)- 1 teaspoon
Peppercorns - 1/2 teaspoon
Red chilly - 1
Tur dhal (lentiles) - 1/2 teaspoon
Curry leaves - req.
Mustard seeds
Salt to taste
Ghee

METHOD

Soak tamarind in 2 cups of water, strain the puree.

Soak cumin seeds, peppercorns , red chilly and thur dal for 5-6 mins ( Dont soak for long time ) and grind together with 4-5 curry leaves coarsely.

Boil tamarind puree with required water and salt for 5 mins. Mix the pepper jeera mixture with 3/4th cup of water and add to it. When it starts to boil, ( remove the foamy layer ) remove from fire and add fresh curry leaves.

Season the mustard seeds in ghee and add to rasam.

NOTE : No rasappodi, asafoetida, tomatoes, garlic are required.

Paruppu thuvaiyal or roasted appalam are good side dishes for this simple recipe.

Tuesday, January 25, 2011

தக்காளி தொக்கு

தக்காளி தொக்கு


தேவையான பொருட்கள்

தக்காளி - 7-8
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
மிளகாய் பொடி - 1  -  1 1/2 தேக்கரண்டி ( தேவைக்கேற்ப)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிது
வெந்தயப் பொடி ( எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடித்தது) - 1/2 தேக்கரண்டி

(விரும்பினால்)
வெல்லம் - ஒரு சுண்டைக்காய் அளவு
புளி - ஒரு சுண்டைக்காய் அளவு

செய்முறை

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பை தாளிகக்வும். அதனுடன் கட்டிப் பெருங்காயத்தையும் சேர்த்து பொரிந்தவுடன் கருவேப்பிலை, அரிந்த தக்காளியைச் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, வெல்லம், புளி எல்லாவற்றையும் சேர்த்து சிறிய தீயில் வதக்கவும். அடிக்கடி கிளறி விடவும். (மூட வேண்டாம்).

எண்ணெய் பிரிந்து வரும்போது வெந்தயப் பொடியைப் போட்டு நன்றாக கிளறியபின் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.

இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் ஏற்ற அருமையான சைட் டிஷ் ஆகும்

SIMPLE TOMATO THOKKU

TOMATO THOKKU



INGREDIENTS


Tomatoes - 7-8
Urad dal - 1 tsp
Mustard seeds - 1 tsp
Asafoetida - 1 small piece
Chilly powder - 1 - 1 1/2 tsp
Turmeric powder - 1/2 tsp
Curry leaves - 1 sprug
Salt
Oil
Fenugreek seeds ( dry roasted and powdered ) 1/2 tsp

(Optional)
Tamarind and Jaggery - a very small piece

METHOD

Cut tomatoes into small pieces.

Heat a kadai and season mustard seeds and urad dal in little oil. Add asatoetida and fry it. Then add cut tomato pieces, curry leaves.


With this add turmeric powder, chilly powder, salt, tamarind and jaggery and cook in low fire. Keep it open and keep stirring often.

When the oil floats on top add fenugreek powder and remove from the flame. Cool it and keep it air tight sterilised bottle to last long.

It is a very good side dish for rice, roti, idli and dosa too.


Sunday, January 23, 2011

இஞ்சிப் பச்சடி

இஞ்சிப் பச்சடி


தேவையான பொருட்கள்

இஞ்சி - 25 கிராம்
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது
தயிர் - 1/2 கப்
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
அலங்கரிக்க - கொத்துமல்லி

செய்முறை.

இஞ்சியின் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணேய் விட்டு நறுக்கிய இஞ்சித் துண்டுகளைப் போட்டு அடுப்பிலிட்டு மிதமான தீயில் வதக்கவும். பின் ஆற விடவும்.

வதக்கிய இஞ்சித் துண்டுகள், துருவிய தேங்காய், பச்சை மிளகாய் இவற்றுடன் உப்பையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

அரைத்த கலவையை தயிரில் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றால் தாளித்து கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

இந்தப் பச்சடி அஜீரணத்துக்கு நல்ல மருந்தாகும். எந்த துவையலுடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.

GINGER RAITHA

GINGER RAITHA



INGREDIENTS


Ginger - 25 gms ( approximately)
Green chilly - 1
Grated coconut - 2 teaspoons
Oil - little
Salt to taste
Curd - 1/2 cup
Oil, Mustard seeds, Urad dal and Curry leaves for seasoning
Coriander leaves for garnishing

METHOD

Peel the ginger and cut into small pieces


Heat a kadai with 1-2 tsp of oil in medium heat and add the ginger pieces and saute them for 5 minutes until it becomes soft. Remove and keep it aside to let it cool.


Add sauted ginger pieces, grated coconut, green chilly, salt in a mixie and grind it.


Mix the paste with curd and season it with mustard seeds, curry leaves and urad dal.


Garnish with coriander leaves and serve.


This is also good for indigestion and goes well with any thuvaiyal.


Saturday, January 22, 2011

பருப்புத் துவையல்

பருப்பு துவையல்


தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 4 அல்லது 5
உப்பு சுவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது

செய்முறை

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் நிறம் லேசாக மாறும் வரை வறுத்து பின் ஆற வைக்கவும்.

துருவிய தேங்காய், உப்பு இவற்றுடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு : சாதத்துடன் சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு துவையலுடன் கலந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள ஓமக் குழம்பு சுவையாக இருக்கும்.

PARUPPU THUVAIYAL

Paruppu Thuvaiyal


INGREDIENTS


Toor dal (lentils) - 1 cup
Grated coconut - 1/2 cup
Red chilies - 4
pepper corns - 4 or 5
Salt for taste
Oil - 1 tsp


METHOD


In a kadai roast the toor dal, red chilles and pepper corns with little oil on low heat until toor dal changes color slightly.


Allow it to cool and grind all together with coconut and salt in a mixie. Add required water and grind it smoothly.


Note : Mix with plain rice along with 1 tsp coconut oil or ghee. Oma kuzhambu goes well with this as side dish.

Friday, January 21, 2011

ஓமக் குழம்பு

ஓமக் குழம்பு


தேவையான பொருட்கள்

ஓமம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
புளி - ஒரு சிறிய எலுமிச்சங்காய் அளவு
சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்

( தேவைப்பட்டால் 1/2 தேககரண்டி அரிசி மாவு)

செய்முறை

புளியை ஊறவைத்து கரைசலை வடிகட்டி 1 1/2 கப் அளவில் வைத்துக் கொள்ளவும்

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, இரண்டாக வெட்டிய மிளகாய் வற்றல், ஓமம் இவற்றைப் போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை, புளிக்கரைசல் இவற்றையும் விட்டு கொதிக்க விடவும்.

குழம்பு வற்ற ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். வத்தக் குழம்பு போல சுண்டியதும் இறக்கி விடவும்.

குழம்பு நீர்க்க இருப்பதாக தோன்றினால் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து குழம்பில் கலந்து விடலாம்.

இது வாயுக் கோளாறுகள், அஜீரணம் ஆகியவற்றுக்கு நல்லது.





OMA KUZHAMBU

OMA KUZHAMBU


INGREDIENTS
 Ajwain seeds (omam) - 1 teaspoon

Red Chilles - 4
Tamarind - 1 small lemon size
Sambhar powder - 1/2 teaspoon
Turmeric powder - 1/4 teaspoon
Mustard seeds - 1/2 teaspoon
Curry leaves

Salt to taste
Oil


optional : rice flour - 1/2 teaspoon ( for thickening)


METHOD


Soak tamarind and prepare puree about one and half glasses.

Heat a kadai with little oil. Add mustard seeds, red chillies ( cut into two) and ajwain seeds (omam).

After it splutters add curry leaves and tamarind puree. Then add sambhar powder,
turmeric powder and salt and allow it to boil and simmer till it  thickens. ( to the consistency of vatha kuzhambu )

If it is too watery, mix the rice flour with little water and add to the boiling kuzhambu.

This gives relief from indigestion and gastric troubles.

Thursday, January 20, 2011

தஞ்சாவூர் கடப்பா

தஞ்சாவூர் கடப்பா


தேவையான பொருட்கள்


உருளைக்கிழங்கு ( சிறியது ) - 1
கேரட் - 1
பீன்ஸ் - 2 அல்லது 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2-3 ( தேவைக்கேற்ப)
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - சிறு துண்டு
முந்திரிப் பருப்பு - 4
பிரிஞ்சி இலை - 1
கிராம்பு - 2
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது.

செய்முறை

காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, முந்திரி, பச்சை மிளகாய் இவற்றை
விழுதாக அரைத்துக் கொள்ளவும். ( பச்சையாகவே) .

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பிரிஞ்சி இலை, கிராம்பு இவற்றைப் பொரிக்கவும். பிறகு காய்கறிகளைப் போட்டு தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும்.

வெந்த பின் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கியபின் கொத்துமல்லி தழையால் அலங்கரிக்கவும்.

இது மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் பிரசித்தமானது.  இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.


THANJAVUR KADAPPA

THANJAVUR KADAPPA


INGREDIENTS 

potato - 1 (small)
carrot - 1 (small)
beans - 2-3
green chillies - 1-2 (as required)
onion - 1
garlic - 4-5 pods
ginger - 1 inch
cashewnuts - 3-4
bay leaf - 1
cloves - 2
salt - to taste
oil - required qty.


METHOD 

Cut the vegetables into small pieces. 
Grind garlic, onion, ginger, cashew, green chillies into fine paste. (raw)
Heat one teaspoon oil in a pan and fry bayleaf and cloves.

Add vegetables and required quantity of water and  cook the vegetables till done.
Add the paste and allow to boil for 5 mins.
After removing from the stove garnish with coriander leaves.

This is a popular side dish for idli and dosai in kumbakonam and mayavaram areas. Of course, this is
a simple receipe only.


Wednesday, January 19, 2011

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு

தேவையான பொருட்கள்



துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை (உதிர்த்தது) - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிது
எண்ணைய் - பொரிக்க
கடுகு - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
காய்கறிகள் - முருங்கைக்காய் அல்லது உலர்ந்த மாங்காய் ( தஞ்சாவூர் வட்டார வழக்கில் கசுமாங்காய் என்று அழைக்கப்படும்)


செய்முறை


புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து இரண்டு கப் அளவுக்கு புளிக்கரைசல் தயாரிக்கவும்.


துவரம்பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம் பருப்பு., கருவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.


புளிக்கரைசலில் உப்பு, காய்கறியைச் சேர்த்து அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.


காய் வெந்தபின் விழுதையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அல்லது கரைசல் கெட்டியாகத் தொடங்கும் வரை கொதிக்க விடவும். கடுகு தாளித்து இறக்கி வைக்கவும்.

சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கு. இதற்கு தேங்காய் போட்டு செய்யும் புடலங்காய் பொரியல் அல்லது எல்லா தயிர் பச்சடியும் நல்ல பக்க உணவாக இருக்கும்.


இந்தக் குழம்பு அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.


MILAGU KUZHAMBU

MILAGU KUZHAMBU


Ingredients:

thur dal - 2 teaspoon
Red chillies - 1-2
pepper - 1 teaspoon
curry leaves  - 1/2 cup
urad dal - 1/2 teaspoon
tamarind - small lemon size
asafoetida - little
oil - to fry
mustard seeds - for seasoning
salt to taste
vegetables : drumstick or dried mango ( called as kas mangai in thanjavur )

METHOD

soak tamarind in water and prepare puree about two glasses of measurement.
fry thurdal, redchillies, pepper, uraddal, curry leaves, hing and grind to fine paste.
add salt, vegetables to tamarind water and let it boil till the vegetables are done.
Add the paste and let it boil for 5-6 minutes or till it becomes like gravy.


season it with mustard seeds.
mix it with rice and ghee.

snake gourd or any sookha baji with coconut or any type of raitha is good combination.

This is very good for digestion.

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்

பொடித்த வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

ஏலக்காய் பொடி - சிறிது

செய்முறை

துருவிய தேங்காயைப் பிழிந்து பால் எடுக்கவும்.

அரிசியை அரைமணி ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு ஆக்கிக் கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் வாணலியில் இட்டு அடுப்பிலேற்றி சூடாக்கி விடாமல் கிளறவும். மாவு கெட்டிப்படுகையில் இறக்கி விட்டு ஆறவிடவும். நன்றாக ஆறுமுன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பொடித்த வெல்லைத்தை இரண்டு கப் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் ( 5 நிமிடங்கள்0

ஒவ்வொரு உருண்டையாக அதில் போட்டு இன்னும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக பிழிந்து வைத்த தேங்காய்ப் பாலை அதில் விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பின் ஏலப்பொடியைச் சேர்த்து கலக்கவும்.

சிறிது நேரம் ஊறியபின் பால் கொழுக்கட்டை மிக சுவையாக இருக்கும்.

Paal kozhukkattai

PAAL KOZHUKKATTAI


Ingredients

1. Rice - 1 cup

2. Jaggery - 1 cup

3. Coconut grated - 1 cup

4. Elaichi powder - 1 tsp

Method

Grind coconut and extract milk.

Soak rice in water for half an hour. Grind it into fine paste.

Add water to the rice paste and make it to dosa batter consistency.

Place a non stick kadai on the stove add the batter, stir continuously to make thick dough. Remove from fire.

Make small balls out of it. Keep aside.

Mix powdered Jaggery in two cups of water. Heat it. Once it dissolves, strain to remove dirt.

Again boil and make it into syrup. (apprx 5 mts).

Add the balls one by one and cook for five more mts.

Finally add the coconut milk to the syrup and switch off the fire.

Add elaichi powder to it.

Tuesday, January 18, 2011

Mor Rasam

Mor rasam
( simple receipe to have during feverish spell )
(This is good especially during evening / night dinner )

ingredients
buttermilk ( slightly sour ) - 1 1/2 cups
turmeric powder - a pinch
omam - 3/4 teaspoon
mustard seeds - 1/2 tea spoon
green chilly - 1
curry leaves
salt
oil - little
rice flour - 1/4 tsp

Method

mix rice flour, salt, turmeric powder with butter milk.

Heat a tawa with little oil. Add mustard, omam, cut green chilly,
curry leaves and season. Add buttermilk mix.
When it starts to boil remove from the stove.
Do not over boil. Mix it with plain rice.

Rice pappad is a good combination as side dish.

மோர் ரசம்

( மாலை மற்றுக் இரவு உணவுக்கு ஏற்றது. காய்ச்சலினால் வாய்க்கசப்பு இருக்கும்போது சாப்பிட உகந்தது)

தேவையான பொருட்கள்

மோர் ( லேசான புளிப்புடன் ) 1 1/2 கப்
மஞ்சள் பொடி   -  ஒரு சிட்டிகை
ஓமம்  - 3/4 தேக்கரண்டி
கடுகு   - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்   - 1
அரிசி மாவு   - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசிமாவு, உப்பு, மஞ்சள் பொடி இவற்றை மோரோடு சேர்த்து கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, ஓமம், மிளகாய், க்ருவேப்பிலை இவற்றைப் போட்டு தாளிக்கவும். மோரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். ( அதிகமாக பொங்க விட வேண்டாம்)

நன்றாக மசித்த சாதத்துடன் கரைத்து கொடுத்தால் வாய்கசப்பு இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள அரிசி அப்பளம் உபயோகிக்கலாம். மழைக்கால இரவு நேரங்களில் வயிற்றுக்கு பாதிப்பு தராத ஒரு உணவு.

Saturday, January 15, 2011

புதுசு புதுசா ஊறுகாய்



மஞ்சள் ஊறுகாய்

பசுமஞ்சள் - 100 கிராம் ( இப்போது பொங்கல் சமயத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் )
மிளகாய் வற்றல் - 10
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
க்டுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு

செய்முறை
பசுமஞ்சளைக் கழுவி தோல் சீவி காரட் துருவுவது போலத் துருவி வைத்துக் கொள்ளவும்.

கட்டிப் பெருங்காயத்தை கொஞ்சமாக எண்ணெய் விட்டுப் பொரித்து வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் ( வாசனை வரும் வரை ) வெந்தயம் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் பெருங்காயத்துடன் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

வாணலியில் எண்ணையை விட்டு கடுகு தாளித்து துருவிய மஞ்சளைப் போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஆறிய பிறகு ஊறுகாய் ஜாடியில் பத்திரப் படுத்தவும.

( இது கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

எந்த ஊறுகாய்க்குமே ஸ்பூனை உபயோகப் படுத்தும்போது ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் )