( மாலை மற்றுக் இரவு உணவுக்கு ஏற்றது. காய்ச்சலினால் வாய்க்கசப்பு இருக்கும்போது சாப்பிட உகந்தது)
தேவையான பொருட்கள்
மோர் ( லேசான புளிப்புடன் ) 1 1/2 கப்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
ஓமம் - 3/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசிமாவு, உப்பு, மஞ்சள் பொடி இவற்றை மோரோடு சேர்த்து கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, ஓமம், மிளகாய், க்ருவேப்பிலை இவற்றைப் போட்டு தாளிக்கவும். மோரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். ( அதிகமாக பொங்க விட வேண்டாம்)
நன்றாக மசித்த சாதத்துடன் கரைத்து கொடுத்தால் வாய்கசப்பு இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள அரிசி அப்பளம் உபயோகிக்கலாம். மழைக்கால இரவு நேரங்களில் வயிற்றுக்கு பாதிப்பு தராத ஒரு உணவு.
No comments:
Post a Comment