பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
செய்முறை
துருவிய தேங்காயைப் பிழிந்து பால் எடுக்கவும்.
அரிசியை அரைமணி ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு ஆக்கிக் கொள்ளவும்.
ஒரு நான் ஸ்டிக் வாணலியில் இட்டு அடுப்பிலேற்றி சூடாக்கி விடாமல் கிளறவும். மாவு கெட்டிப்படுகையில் இறக்கி விட்டு ஆறவிடவும். நன்றாக ஆறுமுன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பொடித்த வெல்லைத்தை இரண்டு கப் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் ( 5 நிமிடங்கள்0
ஒவ்வொரு உருண்டையாக அதில் போட்டு இன்னும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக பிழிந்து வைத்த தேங்காய்ப் பாலை அதில் விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பின் ஏலப்பொடியைச் சேர்த்து கலக்கவும்.
சிறிது நேரம் ஊறியபின் பால் கொழுக்கட்டை மிக சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment