Tuesday, January 25, 2011

தக்காளி தொக்கு

தக்காளி தொக்கு


தேவையான பொருட்கள்

தக்காளி - 7-8
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
மிளகாய் பொடி - 1  -  1 1/2 தேக்கரண்டி ( தேவைக்கேற்ப)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிது
வெந்தயப் பொடி ( எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடித்தது) - 1/2 தேக்கரண்டி

(விரும்பினால்)
வெல்லம் - ஒரு சுண்டைக்காய் அளவு
புளி - ஒரு சுண்டைக்காய் அளவு

செய்முறை

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பை தாளிகக்வும். அதனுடன் கட்டிப் பெருங்காயத்தையும் சேர்த்து பொரிந்தவுடன் கருவேப்பிலை, அரிந்த தக்காளியைச் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, வெல்லம், புளி எல்லாவற்றையும் சேர்த்து சிறிய தீயில் வதக்கவும். அடிக்கடி கிளறி விடவும். (மூட வேண்டாம்).

எண்ணெய் பிரிந்து வரும்போது வெந்தயப் பொடியைப் போட்டு நன்றாக கிளறியபின் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.

இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் ஏற்ற அருமையான சைட் டிஷ் ஆகும்

No comments:

Post a Comment