மிளகுக் குழம்பு
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை (உதிர்த்தது) - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிது
எண்ணைய் - பொரிக்க
கடுகு - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
காய்கறிகள் - முருங்கைக்காய் அல்லது உலர்ந்த மாங்காய் ( தஞ்சாவூர் வட்டார வழக்கில் கசுமாங்காய் என்று அழைக்கப்படும்)
செய்முறை
புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து இரண்டு கப் அளவுக்கு புளிக்கரைசல் தயாரிக்கவும்.
துவரம்பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம் பருப்பு., கருவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
புளிக்கரைசலில் உப்பு, காய்கறியைச் சேர்த்து அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.
காய் வெந்தபின் விழுதையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அல்லது கரைசல் கெட்டியாகத் தொடங்கும் வரை கொதிக்க விடவும். கடுகு தாளித்து இறக்கி வைக்கவும்.
சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கு. இதற்கு தேங்காய் போட்டு செய்யும் புடலங்காய் பொரியல் அல்லது எல்லா தயிர் பச்சடியும் நல்ல பக்க உணவாக இருக்கும்.
இந்தக் குழம்பு அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
I came across your site in blogroll when I was searching for authentic tanjore recipes. Nice blog.
ReplyDeletePlease do drop in to my blog as well.