Thursday, January 27, 2011

மிளகு ஜீரக ரசம்

சுலபமான மிளகு சீரக ரசம்


தேவையான பொருட்கள்

புளி - ஒரு சிறிய எலுமிச்சங்காய் அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கடுகு தாளிக்க
உப்பு தேவைக்கேற்ப
நெய்

செய்முறை

புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து கரைசலை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

மிள்கு, சீரகம், மிள்காய் வற்றல், துவரம் பருப்பு எல்லாவற்றையும் 5 - 6 நிமிடங்கள் ஊறவைக்கவும். ( அதிக நேரம் ஊறவிடவேண்டாம்). பின் அந்தக் கலவையை 4-5 கருவேப்பிலையுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

புளிக்கரைசலுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மிளகு சீரகக் கலவையை 3/4 கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் புளிக்கரைசலில் விடவும்.

அது கொதிக்க ஆரம்பித்ததும் மேலே மிதக்கும் நுரையை எடுத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி கருவேப்பிலை சேர்க்கவும்.

நெய்யில் கடுகைத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.

குறிப்பு : இந்த ரசத்துக்கு ரசப்பொடி, பெருங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. சாதத்துடன் கலந்து பருப்பு துவையல் அல்லது சுட்ட அப்பளம் இவற்றுடன் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment