Saturday, January 15, 2011
புதுசு புதுசா ஊறுகாய்
மஞ்சள் ஊறுகாய்
பசுமஞ்சள் - 100 கிராம் ( இப்போது பொங்கல் சமயத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் )
மிளகாய் வற்றல் - 10
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
க்டுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
செய்முறை
பசுமஞ்சளைக் கழுவி தோல் சீவி காரட் துருவுவது போலத் துருவி வைத்துக் கொள்ளவும்.
கட்டிப் பெருங்காயத்தை கொஞ்சமாக எண்ணெய் விட்டுப் பொரித்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் ( வாசனை வரும் வரை ) வெந்தயம் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் பெருங்காயத்துடன் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணையை விட்டு கடுகு தாளித்து துருவிய மஞ்சளைப் போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஆறிய பிறகு ஊறுகாய் ஜாடியில் பத்திரப் படுத்தவும.
( இது கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
எந்த ஊறுகாய்க்குமே ஸ்பூனை உபயோகப் படுத்தும்போது ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment